அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யவுள்ள சிறிலங்கா கடற்படை
Ranil Wickremesinghe
United States of America
Sri Lanka Navy
By Sumithiran
அணு மற்றும் பிற கதிரியக்க பொருட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்வதை தடுப்பது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்திற்கும் சிறிலங்கா கடற்படைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
குறித்த உடன்படிக்கைக்காக தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த வரைபு தொடர்பாக, இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை சபை, வெளிவிவகார அமைச்சு மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களம் என்பன அவதானித்து, சட்டமா அதிபரின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் சமர்ப்பித்த யோசனைக்கு
இதன்படி, உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அதிபர் ரணில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்