நெடுந்தீவில் கடற்படையிடம் சிக்கிய கடத்தல் பொருட்கள்
நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு சிகரெட்டுகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை சிறிலங்கா கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
கடற்படையின் தகவலின்படி, நெடுந் தீவின் வெள்ளைக் கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை (24) நடத்தப்பட்ட கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கையின் போது இந்த மீட்பு மேற்கொள்ளப்பட்டது. வடக்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள எஸ்.எல்.என்.எஸ் வசபா கப்பலால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
06 சந்தேகத்திற்கிடமான மூடை
வெள்ளைக் கடற்கரையின் கடலோரப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடற்படை வீரர்கள் 06 சந்தேகத்திற்கிடமான மூடைகளைக் கண்டுபிடித்தனர். அந்தப் பொட்டலங்களை முழுமையாக ஆய்வு செய்ததில், 500 வெளிநாட்டு சிகரெட் பொட்டலங்கள், 2,295 பூச்சிக்கொல்லி பொட்டலங்கள், 2,569 களிம்புப் பொட்டலங்கள், 165 வாசனை பொட்டலங்கள் மற்றும் 64 வாசனைத் திரவியக் குப்பிகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைக்காக, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நெடுந்தீவு காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
imajes credit sri lanka navy
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 மணி நேரம் முன்