நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் தாக்குதல் சம்பவத்தில் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Arrest
By Pavi
வாகன விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் நாவலப்பிட்டி மேயரின் மகன் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் தகவலின்படி, வாகன விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது உடல் ரீதியான மோதலாக மாறியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேயரின் மகன் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்