ஹிஷாலினியின் மரணத்திற்கு தேங்காய் உடைத்து நீதி கோரிய மக்கள்!
death
protest
nawalapity
child labor
By Kalaimathy
நாவலப்பிட்டி - கட்டப்புலா தோட்டத்திலுள்ள ஐந்து தோட்டப்பிரிவு மக்கள் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றுளளது.
ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும், பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தொழிற்சாலையில் இருந்து ஊர்வலமாக கோவில் வரை சென்று பெண்களுக்கு பாதூகாப்பு வேண்டும் சிறுமிகளை வேலைக்கு அமர்த்துவதை தடை செய் ஹிஷாலினிக்கு நீதி வேண்டும் என கோரி ஆலயத்தில் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி