நிலவில் கால் பதித்த இந்தியா : பிச்சை எடுக்கும் பாகிஸ்தான்! முன்னாள் பிரதமர் கவலை
நிலவிற்கு இந்தியா விண்கலத்தை அனுப்பியுள்ள அதேவேளை அண்டை நாடான பாகிஸ்தான் நாடு நாடாக சென்று பிச்சை எடுப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூட்டம் ஒன்றில் பேசியபோது,
இந்தியா நிலவை அடைந்தும்
‘இந்தியா நிலவை அடைந்தும் ஜி 20 உச்சி மாநாடு கூட்டங்களை நடத்தி கொண்டிருக்கும்போது பாகிஸ்தான் பிரதமர் ஒவ்வொரு நாடாக சென்று நிதிக்காக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியா அடைந்த சாதனைகளை பாகிஸ்தான் ஏன் அடைய முடியவில்லை இதற்கு யார் பொறுப்பு?
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு வெறும் ஒரு பில்லியன் டொலர் மட்டுமே. ஆனால் தற்போது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 600 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

இந்தியா இன்றைக்கு எங்கேயோ சென்றுவிட்டதும் ஆனால், பாகிஸ்தான் உலக நாடுகளிடம் நிதிக்காக கையேந்திக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.