நெடுந்தீவுக்கான அரச படகு சேவை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
Tamils
Jaffna
By Theepan
நெடுந்தீவுக்கான அரச படகு சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில், நெடுந்தீவுக்கான அரச படகுகளான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை ஆகியவற்றின் சேவை எதிர்வரும் வியாழக்கிழமை (நவம்பர்13) தொடக்கம் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
படகு சேவை
அத்தோடு, தினசரி மாலை நேர சேவை நெடுந்தீவில் இருந்து பி.ப. 3.00 மணிக்கு புறப்படும் எனவும் படகு குறிகாட்டுவானில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுகிழமைகளில் நெடுந்தீவில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் படகு குறிகாட்டுவானில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குமுதினி படகு சேவையில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்