அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி! நான்கு மாதங்களுக்கு முன்பே எச்சரித்த நெத்தன்யாகு
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, அவுஸ்திரேலிய அரசின் கொள்கைகள், அந்த நாட்டில் யூத விரோத உணர்வுகளை (Antisemitism) ஊக்குவித்து வருவதாக, சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே எச்சரித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
இன்று டிமோனா நகரில் நடைபெற்ற அரசாங்க கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பனீஸுக்கு அனுப்பியதாக கூறப்படும் கடிதத்தை மேற்கோள் காட்டினார்.
அந்தக் கடிதத்தில், “யூத விரோதத்தின் தீயில் எண்ணெய் ஊற்றும் செயலை அவுஸ்திரேலியா மேற்கொண்டு வருகிறது” என அவர் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர்
மேலும் அந்தக் கூட்டத்தில், யூத விரோதத்தை ஒரு ‘புற்றுநோய்’ (Cancer) என சுட்டிக்காட்டிய நெத்தன்யாகு, “தலைவர்கள் மௌனம் காக்கும்போது இந்த நோய் வேகமாகப் பரவுகிறது” என தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸை நேரடியாகச் சுட்டிக்காட்டி அவர், “இந்த நோய் பரவ நீங்கள் அனுமதித்தீர்கள். அதன் விளைவாகவே இன்று யூதர்களுக்கு எதிராக நிகழ்ந்த பயங்கர தாக்குதல்களை நாம் பார்த்தோம்” என கடுமையாக விமர்சித்தார்.
சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத சமூகத்தினர் மீதான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒரு இஸ்ரேலிய குடிமகனும் அடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெதன்யாகு இது குறித்து முன்னதாகவே எச்சரித்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 16 மணி நேரம் முன்