1 பவுண்டுக்கு சொந்த வீடு - பிரித்தானியாவில் அறிமுகமாகும் புதிய திட்டம்
பிரித்தானியாவில் வெறும் 1 பவுண்ட் தொகையில் வீடு வாங்கலாம் என்ற புதிய திட்டத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் 300 குடியிருப்புகள் தற்போது இந்த திட்டத்தின் கீழ் தயார் நிலையில் உள்ளது.
மேலும், 2, 3 மற்றும் 4 படுக்கையறை கொண்ட வீடுகள் இந்த புதிய திட்டத்தின் கீழ் விற்பனைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
266 குடியிருப்பு

ஆனால் 25 ஆண்டுகள் வாடகைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னரே, அந்த குடியிருப்பை தொடர்புடைய வாடகைதாரர்கள் 1 பவுண்டு தொகையில் சொந்தமாக வாங்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் வாடகைதாரர்கள் முதல் 20 ஆண்டுகளுக்குள் திட்டத்தை விட்டு வெளியேறினால், தங்கள் காப்பீடு தொகையை பணமாக பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
கட்டுமான நிறுவனமான Willmott Dixon இந்த புதிய திட்டத்தின் கீழ் 266 குடியிருப்புகளை நிறுவ இருக்கிறது. சில குடியிருப்புகள் கட்டுமானத்தில் உள்ளதாகவும் பல குடியிருப்புகளில் மக்கள் குடியேறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
The first residents on a new-build estate are beginning to move into their homes — and some will be able to buy their homes for just £1. More than 250 of the modern houses have been made available at an estate in Wolverhampton.https://t.co/0mHrbnwB1t
— WalesOnline ??????? (@WalesOnline) February 13, 2023
சுமார் 34 மில்லியன் பவுண்டுகள் தொகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நகர நிர்வாகம் சுமார் 5.5 மில்லியன் பவுண்டுகள் வரையில் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.