சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்கள் : வெளியானது அறிவிப்பு
Sri Lanka Cricket
Wanindu Hasaranga
Kusal Mendis
By Sumithiran
சிறிலங்கா கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளுக்கு இருவேறு அணித்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (18) பிற்பகல் தெரிவித்துள்ளார்.
இதன்படி அணியின் சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் குசல் மெண்டிஸ் ஒரு நாள் அணித்தலைவராகவும், சகலதுறை வீரர் வனிந்து ஹசர்ரங்க ரி 20 அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உபுல் தரங்க தலைமையிலான தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு
உபுல் தரங்க தலைமையிலான தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று பிற்பகல் கூடி தீர்மானத்தை எட்டியதாகவும், அந்த முடிவு விளையாட்டு அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அண்மைய நாட்களில் டெஸ்ட் தொடர் இல்லாததால் டெஸ்ட் அணியின் தலைவர் நியமனம் பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்