திருமணம் தொடர்பிலான கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!
Marriage
Health Guide
Cange
General of Health Services
By MKkamshan
திருமண நிகழ்வுகள் தொடர்பில் புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலான புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளில் மதுபான பாவனைக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய சுகாதார வழிகாட்டிற்கமைய திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மரண சடங்குகளில் ஒரு தடவையில் 30 பேர் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்