புதிய பாடத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
புதிய கல்வியாண்டில், தரம் 1 மாணவர்களுக்கு ஜனவரி 29 ஆம் திகதியும் தரம் 6 மாணவர்களுக்கு ஜனவரி 21 ஆம் திகதியும் புதிய பாடத்திட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி சீர்திருத்தங்கள் குறித்த சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் அதனை தெரிவித்துள்ளார்.
புதிய முறை
பாடத்திட்டம் அறிமுகப்படுவது மட்டுமல்லாமல், இந்த புதிய முறையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன், பெற்றோர்கள் புதிய முறையைப் பற்றி அறிந்துகொள்ள திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்துக்களைத் தெரிவித்த அவர், பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு விளக்கமளிப்பது உட்பட அனைத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
இதேவேளை, இந்தப் பாடத்திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 7,181 பயிற்சியாளர் பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், 132,580 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, இந்தப் புதிய தொகுதிகளுடன் இந்தப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களில் 93% பேர் இப்போது பயிற்சி பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு இணையாக, இந்தப் புதிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்த உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |