இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்களால் பேராபத்து!
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் திரிவது தெரியவருகின்றது.
இவர்கள் முகக்கவசங்களை அணியாமல், பொது இடங்களில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதும், கடைகளுக்குள் செல்வதுமாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்வாறு நடப்பது ஏற்புடையதல்ல என்று சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியது.
சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் மற்றொரு கொரோனா அலை ஏற்படலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் டாக்டர் நலிந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.