புதிய பிரதி அமைச்சர்கள் கடமைகளைப் பொறுப்பேற்பு
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பதவியேற்ற அனில் ஜெயந்த பெர்னாண்டோவும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியேற்ற நிஷாந்த ஜெயவீரவும்தங்கள் கடமைகளை ஏற்றுக்கொண்டனர்.
குறித்த நிகழ்வு இன்று (13) நிதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, அமைச்சுப் பதவியை வகிப்பது ஒரு சலுகை அல்ல, ஒரு பொறுப்பு என தெரிவித்துள்ளார்.
பொருளாதார முன்னேற்றம்
அத்துடன், நிகழ்வில் பேசிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர, கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கு பங்களித்த அதிகாரிகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழு இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
