இனப்படுகொலை தொடர்பில் ஐரோப்பாவில் புதிய நகர்வு : சிக்கலில் இலங்கை
தமிழர் தாயகம் உட்பட சர்வதேச அளவில் நேற்றைய நாள் (18) பெரும் சோகத்தையும் சொல்ல முடியாத வலியையும் சுமந்து நகர்ந்த நாளாக காணப்பட்டது.
கொத்து கொத்தாக தமிழ் இனம், துரோகிகளின் பிடியில் சிக்குண்டு சுட்டுகொல்லப்பட்டனர்.
இருப்பினும், தற்போது வரை உயிரிழந்த எந்தவொரு உறவுகளுக்குமான நீதி கிடைக்கவில்லை.
காலம் கடந்து வந்தாலும் அந்த ஒற்றை நாளை மனதில் சுமந்து வாழ்முழுவதும் தாயக மக்கள் வலியை தம்முடன் தம் உறவுகளுக்காக கொண்டு செல்லும் நிலையில், அவர்களுக்கான நீதி என்பது கேள்விக்குட்படுத்தப்பட்ட விடயமாகவே மாறியுள்ளது.
இந்தநிலையில், ஒலிக்கும் அழுகுரல்களுக்கான நீதி, தமிழ் மக்களின் எதிர்காலம், மே 18 இன் வரலாற்று பாதை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவை தொடர்பில் விரிவான கருத்துக்களுடன் நிகழ்ச்சியில் தொடர்கின்றார் ஐபிசி தமிழின் பிரதம செய்தி ஆசிரியர் சிவகுரு பிரேம் (Sivaguru Prem),
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
