இனி பேச்சுக்கு இடமில்லை செயல்வடிவம்தான் : பிரதமர் ஹரிணி திட்டவட்டம்
புதிய மாற்றத்தை நோக்கிச் செல்கையில் மாறுபட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது வழமையானதே, திட்டமிட்டபடி அரசின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென, பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் குளியாப்பிட்டிய கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
பலசுற்று பேச்சுக்களை நடத்திவிட்டோம்
புதிய கல்வித்திட்டம் தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் பலசுற்று பேச்சுக்களை நடத்திவிட்டோம்.தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்க முடியாது.புதிய மாற்றத்தை நோக்கி செல்கையில் மாறுபட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல.

அரசாங்கம் என்ற வகையில்,சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.புதிய தொழிற்றுறையை உருவாக்கும் வகையில் கல்வி கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும். நாட்டில் வேலையின்மை பிரச்சினைக்கு கல்வி கொள்கை ஒரு காரணியாக உள்ளது. இதற்கு தீர்வாகவே புதிய கல்வி மறுசீரமைப்பை அறிமுகப்படுத்த தீர்மானித்தோம்.
பாடசாலை நேர நீடிப்பு அதிபர்களுக்கு சுற்றறிக்கை
தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியாது. தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும்.பாடசாலை நேரங்களை நீடிப்பது தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்பு அடுத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். தரம் 01 முதல் 06 வரையான வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இம்மாதம் இறுதியில் நிறைவடையும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |