கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய மின்சார தொடருந்து திட்டத்தின் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ருவன் செனரத், இப்புதிய மின்சார தொடருந்து திட்டத்தின் ஆரம்பகட்ட திட்டமிடல் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய மின்சார தொடருந்து சேவை
மேலும் அவர் தெரிவிக்கையில், புதிய மின்சார தொடருந்து சேவை மருதானையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

முன்மொழியப்பட்ட திட்டத்துக்கு அமைவாக ருஹுணு குமாரி தொடருந்தில் பயணிக்கும் பயணிகள் பாணந்துறையில் இறங்கி, ஆரம்பிக்கப்படவுள்ள புதிய மின்சார தொடருந்தில் பயணிக்க முடியும் என பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளில் தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து உரையாற்றிய பிரதி அமைச்சர், அரச போக்குவரத்தை வலுப்படுத்தும் விதமாக “மெட்ரோ பேருந்து சேவை”யை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8