மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : நள்ளிரவுமுதல் குறைகிறது எரிபொருள் விலை
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 346 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
பெற்றோல் விலை
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 27 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 329 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
மேலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 434 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மண்ணெண்ணெய் விலை
அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், 247 ரூபாவுக்கு மக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்