ஜேர்மனியில் குடியேற விரும்புபவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
ஜேர்மனியில் (Germany)புதிதாக அரசு அமைக்க திட்டமிட்டுள்ள கட்சிகள், “Turbo” குடியுரிமை விண்ணப்ப முறையை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேர்மனியின் புதிய அரசு அமைக்க கூட்டணிக்கட்சிகள் திட்டமிட்டுவரும் நிலையில், ஆட்சி அமைக்கும் முன்பே புலம்பெயர்தல் தொடர்பில் அந்த கட்சிகள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன.
ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) தலைமையிலான முந்தைய ஜேர்மன் அரசு, ஜேர்மன் குடியுரிமைச் சட்டத்தில் சில மறுசீரமைப்புகளைக் கொண்டுவந்தது.
Turbo குடியுரிமை
அவற்றில் ஒன்று, ஜேர்மன் மொழியில் C1 மட்டத்தில் மொழித்திறமை கொண்டவர்கள், தன்னார்வலராக பணியாற்றுதல் மற்றும் கல்வி அல்லது வேலையில் மிகப்பெரிய சாதனை படைத்தவர்கள் ஆகியோர், 3 ஆண்டுகளில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒரு நடைமுறை ஆகும்.
இந்த நடைமுறையை தற்போதைய அரசு “Turbo” குடியுரிமை பெறுதல் என விபரிக்கிறது.
இந்நிலையில், புதிய அரசு பொறுப்பேற்றபின் அந்த குடியுரிமை முறையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரட்டைக் குடியுரிமை
இருப்பினும், B1 மட்டத்தில் ஜேர்மன் மொழி பேசத்தெரிந்த, ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்த புலம்பெயர்ந்தோர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முறை நடைமுறை நீடிக்கப்படும் என அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும், கூட்டணிக்கட்சிகளிடையே இரட்டைக் குடியுரிமை குறித்து கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், இரட்டைக் குடியுரிமை அனுமதிக்கப்பட உள்ளது எனவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
