புதிய அரசாங்கத்தை இப்போதே விமர்சிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதியின் விளக்கம்!
புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் சரியா தவறா என விமர்சிக்க சுமார் மூன்று ஆண்டுகள் எடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (29.12.2025) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சரியான பாதையில் செல்கிறோமா இல்லையா என்பதை இப்போதே சொல்ல முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க நியமனம்
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஒரு கணக்காய்வாளர் நாயகத்தை நியமித்ததாகவும், அதற்கு அதிகபட்சம் ஒரு மணிநேரம் மட்டுமே எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, “ஜனநாயக ரீதியாக எவரும் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தலாம். வழக்கமாக, புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் சரியா தவறா என விமர்சிக்க சுமார் 3 ஆண்டுகள் எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |