வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் பதவிப் பிரமாணம்
புதிய இணைப்பு
புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவிப் பிரமாணம்
தென் மாகாணத்தின் புதிய ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று (25) ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சில அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக இவர் ஓய்வு பெறுவதற்கு 3 மாத காலம் இருந்தபோது தனது பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அநுர தலைமையில் அமைந்த புதிய அரசாங்கத்தின் 09 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake ) இன்று (25) வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஜனாதிபதி
அந்த வகையில், வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு புதிய ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநராக நிர்வாக சேவை அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பல அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |