தென்னிலங்கையில் சீனாவின் மற்றுமொரு திட்டம் - நிர்ணயிக்கப்பட்ட கால எல்லை
Colombo
Government Of Sri Lanka
Western Province
By Dharu
சீனாவின் நிதியுதவியின் கீழ் கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக புதிய வீடமைப்பு திட்டங்களை நிர்மாணிக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த திட்டத்திற்கு 450 மில்லியன் டொலர் நிதியுதவியை சீனா வழங்கவுள்ளது.
இதற்கமைய கொழும்பின் 5 இடங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சத்யானந்த தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு திட்டம்
இந்த திட்டத்தின் கீழ் 1995 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
மேலும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இந்த வீடமைப்பு திட்டம் நிறைவு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி