சிறிலங்காவில் கடுமையான நடைமுறையின் கீழ் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம்!
Sri Lanka
By pavan
ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் கடமைகளில் ஈடுபட முடியும் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்காக பல்வேறு வழிகளில் சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மசாஜ் நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியான நோய்கள் பரவலாக பரவி வருவதாலே இந்த சட்டம் இயற்றப்படுவதாக ஆணையர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் கட்டாயம்
அதேவேளை, ஆயுர்வேத திணைக்களத்தில் மசாஜ் நிலையங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் கட்டாயமாக இருக்க வேண்டும், மசாஜ் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் தொழில்சார் அறிவு மற்றும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
2 வாரங்கள் முன்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்