பாடசாலைகள், மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம் : அமைச்சரவை ஒப்புதல்
பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாடசாலைக் காலங்களில் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவது, வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படும் விதத்தில் சில குழுக்களின் செல்வாக்கு மற்றும் முறைகேடுகள் தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகள்
இந்தநிலையில், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்களுக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்தோடு, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட யோசனையை தயாரிக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |