நடைமுறையாகும் புதிய சட்டம்: காசோலை எழுதுவோருக்கு முக்கிய தகவல்!
இலங்கையின் வணிகத் துறையில் நிதி முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் ஒரு புதிய சட்ட சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் 13 ஆம் எண் திருத்தச் சட்டத்தின் கீழ், போதுமான நிதி இல்லாமல் காசோலைகளை வழங்குவோருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
தண்டனைகள்
புதிய சட்டத்தின் படி, நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு காசோலையின் பெறுமதிக்கு சமமான அபராதம், அதிகபட்சம் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டும் வழங்க அதிகாரம் பெற்றுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில், கீழுள்ள செயல்கள் தண்டனைக்குரியவை என தெரிவிக்கப்படுகிறது..
- கணக்கில் போதுமான நிதி இல்லாமல் காசோலை வழங்குதல்
- ஓவர்ட்ராப்ட் வரம்பை மீறி காசோலை வழங்குதல்
- மூடப்பட்ட கணக்குகளில் இருந்து காசோலை எழுதுதல்
- சட்டப்பூர்வமாக சரியான காரணமின்றி காசோலைகளில் பணம் செலுத்துவதை நிறுத்துதல்
வலுவான பாதுகாப்பு
இது தொடர்பாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், முன்பு மூடப்பட்ட கணக்குகளில் இருந்து வழங்கப்பட்ட காசோலைகளுக்கு மட்டுமே குற்றவியல் தண்டனை விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சட்டத்தை உருவாக்கிய நிபுணர் குழு, வணிகத் துறையை பாதுகாக்கவும், வர்த்தக சமூகத்தில் நிதி ஒழுங்கை மேம்படுத்தவும், நிறுவனங்கள் விரைவில் வீழ்ச்சி அடைவதைத் தடுப்பதற்கும் இது வலுவான பாதுகாப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
