இலங்கை கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய சட்டம்: அதிகாரங்கள் தொடர்பில் விளக்கம் அளித்த ரணில்
கிரிக்கெட் தொடர்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் எனவும் அதிபர் கூட்டிக்காட்டியுள்ளார்.
நிதி நிர்வாகம்
மேலும், 2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கெட் இருப்பிடம் தொடர்பில் தமக்கு தொலைநோக்குப் பார்வை உள்ளதெனவும், இதனாலேயே பாதீட்டில் 1.5 பில்லியன் ரூபாவை பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அதனை வருடாந்தம் 2 பில்லியன் ரூபாய் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் நிதி நிர்வாகத்தையும், பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்தியையும் சுயாதீன நிதியம் ஒன்றிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், சகல செயற்பாடுகளையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து, எதிர்பார்த்த இலக்குகளை அடைவதே தமது எதிர்பார்ப்பாகும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |