நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வாகன இலக்கத் தகடு - அரசின் அறிவிப்பு
புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத் தகடுகளை விநியோகிக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தக் விடத்தை குறிப்பிட்டுள்ளார்.
10 ஆண்டுகளாக முன்னேறவில்லை
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தற்போது சந்தையில் வாகன இலக்கத்தகடுகள் இல்லாத பெருமளவான வாகனங்கள் உள்ளன.
முந்தைய வர்த்தக நிறுவனங்களுடன் அரசியல் நடவடிக்கை, ஊழல் மற்றும் பொறுப்பற்ற தன்மையால் மோட்டார் வாகனத் திணைக்களம் சுமார் 10 ஆண்டுகளாக முன்னேறவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 900,000 ஓட்டுநர் உரிமங்கள் தேங்கிக் கிடந்த பிரச்சினை தீர்க்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்காலிக தீர்வுகள்
புதிய சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கப்படும் என்றும், வாகன இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்களுக்கு அடுத்த வாரம் தற்காலிக தீர்வுகள் வழங்கப்படும்.
மேலும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
