அரசியல் பிரதிநிதிகளின் கொடுப்பனவு: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்யும் குழுவொன்றை அமைப்பதற்கான பிரதமரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போதுள்ள கட்டளைச் சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போது அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) இதனை தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சித்ரசிறி தலைமையிலான குழுவில் அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் டி.திஸாநாயக்க மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் மதி ஜயந்தா சி.டி.புலுமுல்ல ஆகியோர் அடங்குவர்.
மேலதிக தீர்மானங்கள்
இந்த நிலையில், பல்வேறு உரிமைகள், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை வழங்குவதற்கு பொது வரிகளிலிருந்து ஆண்டுதோறும் கணிசமான செலவை அரசாங்கம் ஏற்க வேண்டும் மற்றும் தற்போதைய நிதித் திறனில் இந்த மிகப்பெரிய செலவினத்தை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
இதன் படி, இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும், அதற்கேற்ப மேலதிக தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |