நாட்டில் தொடரும் தேங்காய் தட்டுப்பாடிற்கு புதிய தீர்வு
நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் குடும்பங்களுக்கு 4 இலட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
குடும்ப அடிப்படையிலான தெங்கு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது.
தென்னை உற்பத்தி
இந்த திட்டத்தின் கீழ் குடும்பங்கள் தென்னங்கன்றுகளைக் கோர முடியுமெனத் தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேங்காய் விலை அதிகரித்தல், தென்னை உற்பத்திகளின் வீழ்ச்சி போன்றவற்றை அடிப்பமையாக கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்