பொதுஜன பெரமுனவுக்குள் உடைவு - உருவெடுக்கும் புதிய அரசியல் கட்சி
SLPP
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
By Vanan
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இணைந்து புதியதொரு அரசியல் கட்சியொன்றை உருவாக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுடன் இருந்த முக்கிய புள்ளி ஒருவரும் இதன் பின்னணியில் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பு பணி

அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் சில கட்சியின் உறுப்பினர்களும் மேலும் சில கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து புதிய கட்சியொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒருங்கிருகிணைப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நோக்கில் இந்தக் கட்சி அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி