செம்மணி விவகாரத்தில் பிரித்தானியா- கனடாவின் தீர்மானம்! ஐ.நாவில் முக்கிய அறிக்கை
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் இலங்கை குறித்து புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்று பிரித்தானியா, கனடா நாடுகள் அறிவித்துள்ளன.
எனினும், இந்தத் தீர்மானம், முன்னைய தீர்மானங்களுடன் ஒப்பிடும் போது மென்மையானதாக இருக்கும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் இலங்கை அரசாங்கத்துக்கு வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இலங்கை குறித்த முந்தைய தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கிய அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியதால் இலங்கை குறித்த புதிய மையக் குழுவின் அமைப்பு மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம்
பிரித்தானியா, அமெரிக்கா, கனடா வுடன் முன்னைய மையக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த மலாவி, மொண்டி னீக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகி யவை இந்த ஆண்டு தீர்மானத்தில் பங்கேற்காமல் போகலாம் என்று இலங்கை அரசாங்கம் நம்புகிறது.
இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல் கர் டர்க், 60ஆவது அமர்வில் "இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை" குறித்த தனது அறிக்கையை முன்வைப்பார்.
வரைவு திட்டத்தின்படி, அமர்வு தொடங்கும் நாளில் - செப்ரெம்பர் 8 ஆம் திகதியன்று இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஆணையாளர் டர்க் ஏற்கனவே செம்மணி புதைகுழியைப் பார்வையிட் டுச் சென்றுள்ளமையால் இலங்கை குறித்த தனது அறிக்கையில் முக்கியமாக அந்த புதைகுழி இடம்பெற வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

