ரகசியமாக எடுத்துச்செல்லப்பட்ட இங்கிலாந்தின் முடிசூட்டு மகுடம்
இங்கிலாந்தின் முடிசூட்டு மகுடமாக கருதப்படும் செயின்ட் எட்வர்ட் மகுடம் லண்டனில் உள்ள ராயல் அரண்மனையில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
கிரீடம் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு ஏற்றவாறு மாற்றும் நோக்கில் எடுக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
கிரீடம் எடுக்கும் நடவடிக்கை ரகசியமாக முன்னெடுக்கப்பட்டதுடன், அது வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பான விபரம் வெளியிடப்பட மாட்டாது என இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
முடிசூட்டு விழா
செயின்ட் எட்வர்ட் மகுடம் முதன்முதலில் 1661 ஆம் ஆண்டு இரண்டாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பயன்படுத்தப்பட்டது.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே 6ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் முடிசூட்டு இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணி இறந்து 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில் சார்லஸ் மன்னர் முடிசூடிக்கொள்ளும் வைபவம் இங்கிலாந்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்
