விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: அரசாங்கம் அறிவித்த புதிய கண்டுபிடிப்பு
இந்நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு ஹெக்டேருக்கு 12,000 கிலோகிராம் நெல் உற்பத்தி செய்யக்கூடிய புதிய நெல் வகைகளை கண்டுபிடித்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம், நாட்டில் நெல் அறுவடை நிச்சயமாக அதிகரிக்கும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த புதிய வகை நெல் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் நெல் உற்பத்தி அரிசிக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது என்று கூறியுள்ளார்.
நெல் உற்பத்தி செயல்முறை
இதன்படி, நெல்லை விலங்குகளுக்கு உணவளிக்கவும் (விலங்கு தீவனமாகவும்), பீர் உற்பத்திக்காகவும், ரொட்டி மாவுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம் என்று அவர் சுட்க்காட்டியுள்ளார்.
மேலும், இந்நாட்டில் நெல் உற்பத்தி செயல்முறையை சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்ட ஒரு செயல்முறையாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த மாற்றத்திற்கு மூன்று முதல் நான்கு பருவங்கள் வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 மணி நேரம் முன்
