இலங்கையரின் தீவிரவாத தாக்குதல்! நியூசிலாந்தில் நிறைவேறியது புதிய பாதுகாப்புச் சட்டம்
நியூசிலாந்தில் இலங்கையரின் தாக்குதல் எதிரொலியை அடுத்து தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதை சட்டவிரோதமாக்கும் புதிய பாதுகாப்புச் சட்டத்தை நியூசிலாந்து நிறைவேற்றியுள்ளது.
செப்டம்பர் 3ம் திகதி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருக்கும் Countdown Lynnmall சூப்பர் மார்க்கெட்டில் இலங்கையர் கத்திக் குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் பலர் பாதிக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இலங்கையர் உயிரிழந்திருந்தார்.
இது தீவிரவாத தாக்குதலாக இருகக்கம் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கூறியிருந்தார்.
மேலும் குறித்த இலங்கையரும் அந்நாட்டில் தீவிரவாத செயலில் ஈடுபட்டிருந்ததாகவும், இதற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலையாகி தீவிர கண்காணிப்பில் இருந்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இத்தாக்குதலின் மூலம் நியூசிலாந்தின் பாதுகாப்புச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் அம்பலமானது.
இதையடுத்து, விரைவில் கடுமையான புதிய பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்துப்படும் என அவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்து.