இலங்கையில் அதிக சொத்துக்கள் கொண்டவர்களை கண்காணிக்க புதிய திட்டம்
Sri Lanka
Economy of Sri Lanka
Income Tax Department
Inland Revenue Department
By Kathirpriya
மிக அதிக நிகர மதிப்புள்ள தனி நபர்களின் வரி நிலைத்தன்மைகள் குறித்து எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வருமானம் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களை கண்காணிப்பதற்காக வரி செலுத்துவோர் அலுவலகத்தின் கீழ் நிறுவப்பட்ட உயர் நிகர மதிப்புள்ள தனிநபர் பிரிவுக்கு கூடுதல் அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்கு தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்