புதிய வரி நடைமுறை : வெளியான முக்கிய தகவல்

Sri Lanka Income Tax Department
By Sathangani Jan 07, 2024 09:21 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

நாட்டில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய வரி நடைமுறையின் கீழ் இலங்கையில் உள்ள ஒருவர் வாகனம், நிலம் அல்லது வீடு வாங்கினால் மட்டும் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களாக பணிபுரிந்து 12 இலட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறானவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியானது தனது திணைக்களத்திற்கு முதலாளி ஊடாக பெறப்படுவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரிக் கொள்கை மற்றும் சட்டப்பிரிவின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் நிஹால் விஜேவர்தன தெரிவித்தார்.

தை திருநாளை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுள்ள சிலம்பம் மற்றும் பீச் கபடி

தை திருநாளை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுள்ள சிலம்பம் மற்றும் பீச் கபடி

வருமான வரி

ஊடகமொன்றில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

புதிய வரி நடைமுறை : வெளியான முக்கிய தகவல் | New Tax Procedure Important Information Released

“ஒருவர் நீண்ட கால சேகரிப்பின் மூலம் வாகனம் வாங்கலாம், வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் ஊடாக கிடைத்த பணம், பரிசாக கிடைத்த பணம், அல்லது மாதாந்தம் செலுத்தி வாகனம் வாங்குவதற்கு வருமான வரி விதிக்கப்படாது.

தாங்கள் வருமானமாக பெறும் 12 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும்.

இதேவேளை தொழிலுக்கு கிடைக்கும் சம்பளத்திலேயே வருமான வரி அறவிடப்படும். அந்த சம்பள பணத்தில் வாகனம் வாங்கினால் அதற்கு வருமான வரி அறவிடப்படாது.

மட்டக்களப்பில் கண்டுப்பிடிக்கப்பட்ட நவீன கைக்குண்டு: காவல்துறையினரால் மீட்பு

மட்டக்களப்பில் கண்டுப்பிடிக்கப்பட்ட நவீன கைக்குண்டு: காவல்துறையினரால் மீட்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

காணி அல்லது வீடு கொள்வனவு செய்யும் போதும் அந்த நபருக்கு எவ்வாறு பணம் கிடைத்ததென்பதனை பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

புதிய வரி நடைமுறை : வெளியான முக்கிய தகவல் | New Tax Procedure Important Information Released

ஒரு வாகனம், வீடு அல்லது காணிக்கு முழு தொகையையும் செலுத்தி கொள்வனவு செய்கின்றார் என்றால் அது தொடர்பான தகவல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கிடைத்துவிடும்.

எனினும் அந்த பணம் எப்படி கிடைத்ததென்பதனை ஆராய்ந்து அது வரி செலுத்தாத வருமானமாக இருந்தால் மாத்திரமே வரி அறவிடப்படும்.“ என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு நேர்ந்துள்ள துயரம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

தெஹிவளை மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு நேர்ந்துள்ள துயரம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021