எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி - ஹோட்டல்கள் எடுத்த முடிவு
புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பால் சாதம் மற்றும் மிட்டாய்களைப் பெறுவதற்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஓடர்களை ஏற்க பல ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் மிட்டாய் நிறுவனங்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் தயக்கம் காட்டினாலும் இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் சாதம், மிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஓடர் செய்யவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பால் சாதம் மற்றும் தின்பண்டங்களைப் பெறுவதற்காக ஒவ்வொரு நகரத்திலும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் நீண்டகாலமாக ஓடர்களை வழங்கி வருவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் உணவகங்களின் எண்ணிக்கை 20,000 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், காஸ் தட்டுப்பாடு காரணமாக பட்டாணி வண்டிகள், சோள வண்டிகள், என ஏறக்குறைய பல்லாயிரக்கணக்கான வர்த்தக நிறுவனங்கள் முற்றாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.