மக்களே இனி முடிவெடுக்க வேண்டும்! திரைமறைவில் இரகசியமாகத் திட்டம் போட்டுள்ள ரணில்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கஷ்டமான காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்தை முன்வைத்த ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே என கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தாவில் கட்சி நிர்வாக குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறு தான் தொடர்ந்தும் கூறிய போதிலும் அரசாங்கம் அதனை விரும்பவில்லை என்றால் செய்வதற்கு எதுவுமில்லை.
தற்போது அடுத்த கட்ட முடிவு மக்களின் கைகளிலேயே உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்ற போதிலும் அந்த காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த நிவாரண உதவிகளும் இரத்துச் செய்யும் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,