மீண்டும் அதிபராக ரணில் - வலியுறுத்தும் முக்கிய உறுப்பினர்
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சுயாதீன மற்றும் கட்சி சார்பற்ற வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளதாக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சி புதிய கூட்டணியொன்றையும் அமைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதிபராக தெரிவு செய்யப்பட வேண்டுமென கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையை அபிவிருத்தியடைய செய்யக்கூடிய ஒரே கட்சி, ஐக்கிய தேசிய கட்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய நெருக்கடி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் இலங்கையை ஆட்சி செய்த போது அரச ஊழியர்களின் மாதந்த சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டதாகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் குறைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பின்னணியில், இலங்கை ஒரு நாடாக தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டுமென ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கை சரியான வளர்ச்சி பாதையில் தற்போது அடியெடுத்து வைக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருக்குமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.