அடுத்த வருடம் நிலைமை மேலும் மோசமடையும் - வெளிப்படையாக தெரிவித்த அமைச்சர்
அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும், அடுத்த வருடம் இந்த நிலைமை மேலும் மோசமாகும் எனவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera)தெரிவித்துள்ளார்.
"அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. இன்று வாங்கிய கடனுக்கான வட்டியை கட்ட மீண்டும் கடன் வாங்க வேண்டியுள்ளது. நம் நாடு இன்று பின்னோக்கி சென்றுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. அது எங்களுக்கு தெரியும். நாளையும் இதை எதிர்கொள்ளுங்கள், நாளை முடிவடையும் என்று சொல்ல முடியாது.
நான் தெளிவாகப் பார்ப்பது என்னவென்றால், அடுத்த ஆண்டு இன்னும் மோசமாக அமையலாம். அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்படும் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் எதுவும் செய்ய முடியாது எனத் தெரிவித்தார்..
இன்று (14) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.