இலங்கை- பாகிஸ்தான் நாட்டவர்கள் தொடர்புட்ட சதி வழக்கின் முக்கிய குற்றவாளி கைது
இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் சம்பந்தப்பட்ட உளவு வழக்கில் 2023ஆம் ஆண்டு பிணை வழங்கப்பட்ட நிலையில், தலைமறைவான ஒருவரை, இந்திய தேசிய புலனாய்வு(NIA) அமைப்பு கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கைது சம்பவமானது நேற்று(15) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், இலங்கையின் கொழும்பில்(Colombo) உள்ள பாகிஸ்தான்(Pakistan) உயர்ஸ்தானிகரகத்தில் பணிபுரிந்த இலங்கை நாட்டவரான முகமது சாகிர் ஹ_சைன் மற்றும் பாகிஸ்தானிய நாட்டவர் அமீர் சுபைர் சித்திக் ஆகியோருடன் இணைந்து சந்தேகநபர், பயங்கரவாத சதி செய்தார் என்பதே (கைது செய்த நபர்)நூர்தீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.
முக்கிய குற்றவாளி கைது
இவரை பயன்படுத்தி 2014ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல்(Isreal) தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த மே 7ஆம் திகதி டிரொரஃபி நூருதீன் என்ற இவரை குற்றவாளியாக இந்திய நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதற்கு முன்னதாக குறித்த நபரை கைது செய்ய உதவுவோருக்கு 5 இலட்சம் பணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் இருந்து நூர்தீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு
மேலும், அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டதாக என்ஐஏ(NIA) என்ற இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நாட்டவரின் வழிகாட்டலில் போலியான இந்திய ரூபாய்கள் மூலம் தேச விரோத உளவு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதில் நூருதீன் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |