விலை உயர்வை கட்டுப்படுத்த அவசர கால நிலையை பிறப்பித்த நைஜீரிய அதிபர்
நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் அவசர கால நிலையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் கடந்த மே மாத பணவீக்கம் 22.41 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நைஜீரியா தனது வேளாண் துறையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
உணவுப்பொருட்களின் விலை உயர்வு
Today, we declared a state of emergency and unveiled a comprehensive intervention plan on food security, affordability, and sustainability, taking decisive action to tackle food inflation. These are steps towards a more food secure Nigeria for all.
— Bola Ahmed Tinubu (@officialABAT) July 13, 2023
Our new initiatives will tackle… pic.twitter.com/DBb81p1jd2
குறிப்பாக, காலநிலை மாற்றம், பூச்சிகள் மற்றும் நோய் அச்சுறுத்தல்கள் போன்றவை அங்கு உணவு உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் உணவுப்பொருட்களின் விலையும் உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி நாட்டில் அவசர கால நிலையை அறிவித்து நைஜீரிய அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார்.