அவர்களை முடித்துவிடுங்கள் : அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்த தகவல்
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் மூர்க்கமாக போர் நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் இயக்கத்தை முடித்துவிடுங்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்காவில் இருந்து 'மெசேஜ்' அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடக்கும் மோதல் பெரும் போராகவே மாறிவிட்டது.
உருக்குலைந்து போன இஸ்ரேல்
கடந்த சனிக்கிழமை ஹமாஸ் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்தே போய்விட்டன. 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் கை, கால்கள் என உடல் உறுப்புகளை இழந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் நிக்கி ஹேலி இந்தப்போர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அவர்களை முடித்துவிடுங்கள்
"அவர்களை (ஹமாஸ்) முடித்துவிடுங்கள்" என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை டேக் செய்து கூறியிருக்கிறார் நிக்கி ஹேலி.
What does “finish them” mean? When many countries are calling for an end to escalating tensions, @NikkiHaley seems to be inciting more killings.
— Hu Xijin 胡锡进 (@HuXijin_GT) October 8, 2023
And such a person is running for US president. pic.twitter.com/M8BFL6WmmL
முன்னதாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், "நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். இன்று இஸ்ரேலுக்கு நடந்தது, நாளை அமெரிக்காவுக்கு நடக்கலாம். ஹமாஸும், அவர்களின் ஆதரவாளர்களும் ஒருகாலத்தில் அமெரிக்காவை அழிக்க வேண்டும் எனக் கூறியவர்கள் தான். எனவே, இந்த தருணத்தில் இஸ்ரேலுக்கு நாம் துணை நிற்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
