உண்மையான குற்றவாளிகளை பிடிக்க தவறிய அநுர : எழுந்துள்ள கண்டனம்

Anura Kumara Dissanayaka Sri Lankan political crisis Current Political Scenario
By Shalini Balachandran Apr 21, 2025 08:00 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடைசியாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது என ஊடகவியலாளரும் செங்கலடி தளவாய் வட்டார தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (21) செங்கலடி - புலையவெளி பகுதியில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற மிக மோசமான இந்த பயங்கரவாத தாக்குதலால் சுமார் 260 மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள்.

27 பிரான்ஸ் எம்பிக்களின் விசாக்கள் திடீர் ரத்து : இஸ்ரேல் அதிரடி

27 பிரான்ஸ் எம்பிக்களின் விசாக்கள் திடீர் ரத்து : இஸ்ரேல் அதிரடி

நாடாளுமன்ற பெரும்பான்மை

இன்றுவரை அவர்கள் எதற்காக கொல்லப்பட்டார்கள், ஏன் பலியானார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இன்று ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசினால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபித்து நீதியின் முன் நிறுத்த முடியவில்லை.

உண்மையான குற்றவாளிகளை பிடிக்க தவறிய அநுர : எழுந்துள்ள கண்டனம் | Nilandhan S Opinion On The Anura Government

கடைசியாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடாத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என கூறி மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தனர்.

அவர்களிடம் ஜனாதிபதி பதவியை கொடுத்துள்ளோம், நாடாளுமன்ற பெரும்பான்மையை கொடுத்துள்ளோம் அதனை வைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியவில்லை.

தற்போது அவர்கள் உள்ளூராட்சி சபையின் அதிகாரங்களை தங்களுக்கு தருமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.  

கனடாவிலுள்ள இந்து கோவில்கள் மீது நடந்த தாக்குதல்

கனடாவிலுள்ள இந்து கோவில்கள் மீது நடந்த தாக்குதல்

அரசுக்கு அழுத்தம்

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தை வைத்து செய்யமுடியாதவர்கள் உள்ளூராட்சி சபைகளை வைத்து என்ன செய்ய போகின்றனர்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி ஆகி ஒரு வருடங்கள் ஆகிய நிலையில் அவர் இந்த ஆறாவது ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்திய உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடித்து உலகிற்கு காட்டுவார் என எதிர்பார்த்தோம்.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, இதுவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை.

உண்மையான குற்றவாளிகளை பிடிக்க தவறிய அநுர : எழுந்துள்ள கண்டனம் | Nilandhan S Opinion On The Anura Government

ஏய்தவர்கள் இருக்கும் போது அம்புகளை கைது செய்யும் நிலையே காணப்படுகிறது.

பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ச்சியாக உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடத்திய சூத்திரதாரிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இலங்கை கிரிஸ்தவ மக்களை தொடர்ச்சியாக இந்த அரசும் ஏமாற்றி வருகிறது.

தாங்க ஏன் கொல்லப்பட்டோம் எதற்காக கொல்லப்பட்டோம் என்று தெரியாமலே சில குழுக்களின் சில தேவைகளுக்காக பலி கொடுக்கப்பட்ட உயிர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமாக இருந்தால் ஏழாவது உயிர்த்த ஞாயிறு நினைவு தினத்திலாவது இந்த மக்கள் ஏன் கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள் ? யாருக்காக கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை கண்டுபித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் இறப்பதற்கு முதல் நாள் விடுத்த கோரிக்கை

போப் பிரான்சிஸ் இறப்பதற்கு முதல் நாள் விடுத்த கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, சுண்டிக்குளி, Markham, Canada

20 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, மலேசியா, Malaysia, ஜேர்மனி, Germany

22 Apr, 2021
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், கொழும்பு

20 Apr, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பிரான்ஸ், France

15 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024