பதவியை கைவிடத் தயார்! விளக்கம் வழங்கிய ஆளும் தரப்பு எம்.பி
தாங்கள் வகிக்கும் பதவிகளை எந்த நேரத்திலும் கைவிடுவதற்கு தாம் உள்ளிட்ட குழுவினர் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களுக்கு பதவிகள் என்பது அதிகாரத்திற்கானவை அல்ல, மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் மட்டுமே எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகள்
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“ 2029ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியை இலக்காகக் கொண்டு செயற்படும் சிலர் உள்ளனர். அவ்வாறானவர்கள் மிகவும் சிரமப்பட்டு மக்களை ஒன்றுதிரட்டி அரசியல் இயக்கங்களை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கிராமத்திற்கு வந்தவர் அல்ல. தம்புத்தேகம ரம்பண்டாவின் மகனாக, மண்ணில் காலூன்றி, மண்ணின் வாசனையை அறிந்த தலைவராக அவர் இருக்கின்றார்.
நாங்கள் மீண்டும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து மண்ணுக்கு வர வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எப்போதும் மக்களோடு, மண்ணோடுதான் இருக்கிறோம்.
எனவே, 2029ஆம் ஆண்டை கனவு காண்பவர்களிடம் நாங்கள் கூறுவது என்னவென்றால், மிகவும் திட்டமிட்டும் ஒழுங்கமைக்கப்பட்டும் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்து இந்தப் பயணத்தை முன்னெடுத்து வருகிறோம்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |