சீரற்ற வானிலையால் மூடப்பட்ட நிலாவெளி புறா தீவு!
Sri Lanka
Weather
Rain
By Kanooshiya
கடல் கொந்தளிப்பு மற்றும் சீரற்ற வானிலை காரணமாக நிலாவெளி புறா தீவு தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, தீவுக்கான நுழைவுச் சீட்டுகளை வழங்கும் செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு
கடல் கொந்தளிப்பு மற்றும் சீரற்ற வானிலை எப்போது மேம்படும் என்பதை குறிப்பிட முடியாது என்பதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பூங்காவின் காப்பாளர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 6 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்