ஆளும் தரப்பு எம்.பிக்கு இளைஞர் குழுவால் இன்று ஏற்பட்ட நிலை (video)
தற்போதைய பொருளாதார நெருக்கடி அதனாலேற்பட்ட விலையேற்றம் காரணமாக மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நாட்டின் பலபகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக காலிமுகத்திடலில் இன்றையதினம் எட்டாவது நாளாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளும் தரப்பு எம்.பிக்கள் வெளியில் நடமாடுவதும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி ஒரு சம்பவம் இன்றையதினம் திஹகொட, ஊருபொக்கவில் இடம்பெற்றுள்ளது.
ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க சென்ற வாகனத்தை வழிமறித்த இளைஞர்கள் அவருக்கெதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் அவர் சுதாகரித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு வேகமாக சென்றுள்ளார்.
උරුබොක්ක, තිහගොඩ ප්රදේශයේ නිවසක තිබු පාක්ෂික රැස්වීමකට සහභාගී වීමට පැමිණි ශ්රී ලංකා පොදුජන පෙරමුණේ මන්ත්රී නිපුන රණවකට එල්ලවූ විරෝධතාවය මැද මන්ත්රීවරයා එම ස්ථානයෙන් ඉවත්ව ගිය අයුරු. #lka #SriLanka pic.twitter.com/QxzlOCOSFs
— Dinuk (@22Dinuk) April 16, 2022
