“நாங்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்?” வதந்திகளுக்கு திருக்குமார் நடேசன் பதிலடி
பண்டோரா ஆவணங்களில் எமது பெயர் வந்துள்ளமை குறித்து சுயாதீன விசாரணைக்கு நான் கோரியுள்ளேன், அதனால் நானும் என் மனைவியும் ஏன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்? என திருக்குமார் நடேசன் (Thirukumar Nadesan) கேள்வி எழுப்பினார்.
பண்டோரா ஆவண சர்ச்சையில் சிக்கிய தொழிலதிபர் திருக்குமார் நடேசன் அவரது மனைவியான முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஸ (Nirupama Rajapaksa) நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து எழுந்த சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
நானும், எனது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச் சென்றமை போலியான செய்தி என தெரிவித்தார்.
நானும், எனது மனைவியும் இலங்கையில் அதிகம் இருந்ததால் இந்த நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை.
நாங்கள் வேறு எந்த நாட்டிற்கும் ஓடி ஒளியவில்லை, நாங்கள் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.
குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு சுயாதீன விசாரணைக்கு நான் கோரியுள்ளேன், அதனால் நானும் என் மனைவியும் ஏன் வெளியேற வேண்டும்? இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை,” என
நடேசன் கூறினார்.