மன்னாரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை இல்லை
மன்னாரில் காற்றாலை உபகரணங்கள் கொண்டு வரப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு எதிராக விசாரணை ஏதும் நடத்தப்படாது என, காவல்துறை ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வினீத் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், மன்னாரில் காற்றாலைகள் அமைக்கப்படுவதை எதிர்க்கும் பொதுமக்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பல போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது விசாரணை
காவல்துறையினரின் கடமைக்குத் தடை விதித்ததாகவும் அமைதியைக் குலைத்ததாகவும் கூறப்படும் பல போராட்டக்காரர்கள் மீது விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
காவல்துறையினருடனான மோதலின் போது, மூன்று போராட்டக்காரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் கடமைகளையே செய்தனர்
எனினும் இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கப்படமாட்டார்கள்.
போராட்டக்காரர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறலாம். ஆனால் இந்த அதிகாரிகள் தங்கள் கடமைகளையே செய்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
