இனவாதத்தினாலும் சிதைப்பதற்கு வாய்ப்பில்லை: பிரதமர் ஹரிணி பெருமிதம்
இனவாதம் மற்றும் மதவாதத்தின் ஊடாக தேர்தலை சிதைப்பதற்கு வாய்ப்பில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
கம்பளையில் (Gampola) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் புரட்சி
அத்தோடு, அரசியல் மேடைகளில் பொய் சொல்பவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்ற போது நாட்டில் புரட்சி ஒன்று ஏற்பட்டதாகவும், தாங்கள் மக்களுக்கு நெருக்கமாகவும் மக்களுக்காகவும் ஒரு புரட்சியை நடத்தி வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களுக்கான சந்தர்ப்பம்
இதேவேளை, நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்தி நாடாளுமன்றத்தை மக்கள் பக்கம் திருப்புவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மக்களின் தேவைக்கேற்ப சட்டங்களை இயற்றும் ஜனாதிபதி ஒருவர் இருப்பதற்கும், நாடாளுமன்றத்தை பணம் ஏற்றுக்கொள்ளும் இடமாக மாற்றுவதற்கும் யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |