மகிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! ஆராய்கிறது எதிரணி
விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு (Mahindananda Aluthgamage) எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான ஆரம்பகட்டப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன எனவும், பங்காளிக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது எனவும் தெரியவருகின்றது.
முறையற்ற உர முகாமைத்துவத்தால் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, முறையற்ற கொடுக்கல், வாங்கல்கள் காரணமாக சீனாவுடன் ஏற்பட்டுள்ள இராஜதந்திர நெருக்கடி மற்றும் திரவ உரம் இறக்குமதியில் இடம்பெற்றுள்ளதாகவும் மோசடி உட்பட மேலும் பல விடயங்களை மையப்படுத்தியே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,